கீ.காமாட்சிபுரத்தில்பிரமலை கள்ளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில பிரமலை கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் சார்பில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கீ.காமாட்சிபுரம் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி
தமிழ் மாநில பிரமலை கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் சார்பில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கீ.காமாட்சிபுரம் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் தவமணி, காசிமாயன், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, டி.என்.சி. சாதி சான்றிதழ் வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கும் கள்ளர் பள்ளிகளை அரசு கல்வித்துறையோடு இணைப்பதை கண்டித்தும், கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story