கீழ்வேளூர் பேரூராட்சியில், மரக்கிளைகளை அகற்ற வேண்டும்


கீழ்வேளூர் பேரூராட்சியில், மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
x

கீழ்வேளூர் பேரூராட்சியில், மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கீழ்வேளூர் பேரூராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வது.

பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும். பேரூராட்சியில் முக்கிய இடங்களில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட்டுகள் வழங்கப்பட்டன.


Next Story