கிசான் சம்மன் திட்டத்தில் நிதி பெறும் விவசாயிகள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்: வேளாண்மை அதிகாரி தகவல்
கிசான் சம்மன் திட்டத்தில் நிதி பெறும் விவசாயிகள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்தார்
தேனி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பாரத பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் பெற பதிவு செய்தவர்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்து தற்போது வங்கி கணக்குகளில் நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகள் தொடர்ந்து நிதியினை பெற முடியும். புதுப்பிக்க தவறுபவர்களுக்கு நிதி நிறுத்தி வைக்கப்படும்.
எனவே விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று ஆதார், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண் உள்ளிட்டவற்றை கொண்டு பதிவினை புதுப்பித்து பயன்பெறலாம் என்று கடமலைக்குண்டு வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story