கொடிவேரி அணை-பங்களாப்புதூர் பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது


கொடிவேரி அணை-பங்களாப்புதூர் பகுதிகளில்   செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
x

4 பேர் கைது

ஈரோடு

திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் குமரகுரு. அவருடைய மனைவி புவனேஷ்வரி (வயது 40). இவர் நேற்று ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். இந்த நிலையில் அவர் பையில் செல்போனை வைத்துவிட்டு குளிக்க சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது செல்போனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை திருடியதாக புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரமேஸ் (26), வடக்கு மோதூரை சேர்ந்த சாமிநாதன் மகன் தேவராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் டி.என்.பாளையத்தை சேர்ந்த ராஜேஸ் கண்ணா (40) என்பவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் பட்டறை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இங்கு வேலை கேட்டு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அப்போது மேஜை மீது ராஜேஷ் கண்ணா வைத்திருந்த செல்போனை எடுத்துக்கொண்டு் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பித்து சென்றனர்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொங்கர்பாளையம் இந்தி்ராநகரை சேர்ந்த வேலுசாமி மகன் ராகவன் (24), பழையூரை சேர்ந்த பிரதீப் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்தும் மொத்தம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story