கொம்மடிக்கோட்டை கல்லூரியில்விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொம்மடிக்கோட்டை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
கொம்மடிக்கோட்டை, சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாற்றத்தை தேடி என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் போலீசார் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் மகேஷ் குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நாட்டு நல பணி திட்ட அலுவலர் அசோக் லிங்கம் மகிபால் நன்றி கூறினார். இந்தநிகழ்ச்சியில் செஞ்சுருள் சங்க அலுவலர் வேல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story