கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். கோவில்பட்டி அருகே செண்பகபேரி கிராமத்துக்கு இயக்கப்பட்ட 5 மினி பஸ்களில் தற்போது ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே 5 மினி பஸ்களையும் செண்பகபேரி கிராமத்துக்கு முறையாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு பரமராஜ், நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன், கிளை செயலாளர் செல்வம், நகர குழு ஜோசப், தாலுகா குழு சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத்திடம் கோரிக்கை மனுவை வழங்கி விட்டு கலைந்து சென்றனர்.

----


Next Story