கோவில்பட்டியில் வனத்துறை அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகை
கோவில்பட்டியில் வனத்துறை அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி வன பாதுகாவலர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தார், விளாத்திகுளம் தாலுகாக்களிலுள்ள விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாரான காய்கறிகள் மற்றும் விவசாய விளை பொருட்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை பிடித்து வேறு காட்டுப்பகுதிகளில் விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் உதவி வன பாதுகாவலர் பானுப்பிரியாவை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story