கோவில்பட்டியில்கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று மாலையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கருப்பு சின்னம் அணிந்து, கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, பென்ஷன் வழங்க வேண்டும். 180 நாள் விடுப்பு சேமிப்பு வழங்க வேண்டும், ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோட்ட செயலாளர் பூராஜா, துணை செயலாளர் சுப்பையா, பொருளாளர் முருகன், கிளைச் செயலாளர்கள் பிச்சையா, பட்டுராஜன், பண்டாரம், ஞானராஜ் பாண்டியன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story