கோவில்பட்டியில் மதுபோதையிலிருந்த வாலிபர் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

கோவில்பட்டியில் மதுபோதையிலிருந்த வாலிபர் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மதுபோதையிலிருந்த வாலிபர் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் மதுபோதையிலிருந்த வாலிபர் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

கொரியர் நிறுவன ஊழியர்

கோவில்பட்டி வேலாயுதபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சேர்மராஜ் (வயது 32). தனியார் ஆன்லைன் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சேர்மராஜ் மது போதையில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்துள்ளார்.

தவறி விழுந்தார்

நள்ளிரவில் அவர் திடீரென்று மொட்டை மாடியிலிருந்து தவறி இரு வீடுகளுக்கிடையே உள்ள சந்தில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

நேற்று அதிகாலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சேர்மராஜ் வீடுகளுக்கு இடைப்பட்ட சந்தில் விழுந்து கிடந்ததை பார்த்தபோது ஓடிச்சென்று தூக்கியுள்ளனர். அப்போது அவர் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சுய நினைவின்றி கிடந்துள்ளார். உடனடியாக அவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story