கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில்8,257 மாணவ, மாணவிகள்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதினர்


கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில்8,257 மாணவ, மாணவிகள்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதினர்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8,257 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதினர்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8,257 மாணவ, மாணவியர் எழுதினர்.

38 மையங்களில் தேர்வு

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நேற்று 38 மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு தமிழ் முதல் தாள் பேப்பர் நடந்தது. இதில் தனித்தேர்வர்கள் 65 பேர் உள்பட 4333 மாணவர்களும், மாணவிகள் தனித்தேர்வர்கள் 31 பேர் உள்பட 4210 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

286 பேர் எழுதவில்லை

இதில் மாணவர்கள் 4,219 பேரும், மாணவிகள் 4138 பேரும் தேர்வு எழுதினா். 72 மாணவிகள் உள்பட 286 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை கண்காணிக்க 60 பறக்கும் படைகளை மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் நியமித்திருந்தார். அவர் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எட்டயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 320 மாணவ -மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர்.. இதில் 6 பேர் தேர்வு எழுத வரவில்லை.


Next Story