கோவில்பட்டி புற்றுக் கோவிலில்பங்குனி உத்திர விழா
கோவில்பட்டி புற்றுக் கோவிலில் பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டுசிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாரதணை நடைப்பெற்றது. வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார திபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story