கூடலூரில், கஞ்சா விற்ற தொழிலாளி கைது


கூடலூரில், கஞ்சா விற்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில், கஞ்சா விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கூடலூர்: கூடலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜூக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராஜகோபாலபுரம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தேவர்சோலை பேரூராட்சி செளுக்காடியை சேர்ந்த தொழிலாளி அனிபா (வயது 53) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனிபாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story