குமரியில் 59,885 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்


குமரியில் 59,885 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
x

குமரியில் 240 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வை 59 ஆயிரத்து 885 பேர் எழுதினர். 11 ஆயிரத்து 567 பேர் எழுதவில்லை.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,:

குமரியில் 240 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வை 59 ஆயிரத்து 885 பேர் எழுதினர். 11 ஆயிரத்து 567 பேர் எழுதவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணிகளில் 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 24-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை எழுத தமிழ்நாடு முழுவதும் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது.

குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 71 ஆயிரத்து 452 பேர் குரூப்-4 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள 194 பள்ளி, கல்லூரிகள் உள்பட மொத்தம் 240 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு நேற்று தேர்வு நடைபெற்றது.

59,885 பேர் எழுதினர்

இந்த தேர்வை எழுதுபவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.

தேர்வு எழுதுபவர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டு, தங்களுக்கான ஹால் டிக்கெட்டை காட்டிய பிறகு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்து, சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 452 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 59 ஆயிரத்து 885 பேர்களே வந்து தேர்வு எழுதினார்கள். 11 ஆயிரத்து 567 பேர் தேர்வு எழுதவராமல் ஆப்சென்ட் ஆனார்கள். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

குரூப்-4 தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்தவர்களிடம் தேர்வு மையத்துக்குள் செல்லும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார்கள். பின்னர் மாணவர்கள் காலை 9.10 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு தேர்வு மையத்தின் மெயின் நுழைவு வாசல் மூடப்பட்டது.

கண் பார்வையற்றவர்கள் போன்ற மாற்று திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்


Next Story