கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம்


கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம்
x

கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டம்

தஞ்சாவூர்

கும்பகோணம்:

தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணத்தில், விவசாயிகள் சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேங்காய் உடைக்கும் போராட்டம்

தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பு செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமலிங்கம், ராஜேந்திரன், கனகராஜ், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச்செயலாளர் மு.அ.பாரதி தொடங்கி வைத்தார். போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச்செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்தார்.

கொள்முதல் செய்ய வேண்டும்

கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை வட்டார அளவில் திறக்க வேண்டும். உரி தேங்காய்களை கேரளா மாநிலத்தில் கொள்முதல் செய்வது போல் தமிழகத்திலும் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.150-ம், உரி தேங்காய் கிலோவுக்கு ரூ.50-ம் வழங்க வேண்டும். பொது வினியோக அங்காடிகளில், சத்துணவு மையங்களில் சமையல் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். சிறு, குறு தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக கையில் தேங்காய்களுடன் கோஷமிட்டனர். பின்னர் தேங்காய்களை சாலையில் உடைத்தனர்.


Next Story