குளித்தலையில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனை


குளித்தலையில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனை
x

குளித்தலையில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடந்தது.

கரூர்

குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு தலைமையிலான போலீசார் சார்பில் தினசரி வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அண்மைக்காலங்களாக விபத்துகளை தடுக்கும் பொருட்டு மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை தீவிரமாக சோதனை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் சாலைகளில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மது அருந்தி வாகனங்கள் ஓட்டும்போது ஏற்படும் பல்வேறு விளைவுகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குளித்தலை பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தும் வகையில் தற்போது போக்குவரத்து போலீசார் உடன் ஆயுதப்படை போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story