மதுரையில் கொரோனா பாதிப்பு 50-ஐ தொட்டது


மதுரையில் கொரோனா பாதிப்பு 50-ஐ தொட்டது
x

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய பாதிப்பு 50-ஐ தொட்டது.

மதுரை

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய பாதிப்பு 50-ஐ தொட்டது.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையில் 10-க்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி, மதுரையில் நேற்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில், 26 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர்.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து 182 ஆக உள்ளது. அவர்களில் 160 பேர் வீட்டு தனிமைப்படுத்துதல் சிகிச்சையில் இருக்கின்றனர். குறைந்த நபர்களே தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மை தான். ஆனால், உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கும் வரை எந்தவித அச்சமும் தேவையில்லை.

முககவசம் அணிய அறிவுரை

மதுரையில் தினமும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் அவர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு லேசான பாதிப்பு இருப்பதால், வீட்டு தனிமைப்படுத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள கோவில்கள், ஓட்டல்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். முக கவசம் அணிவதன் மூலம் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படாமல் தடுக்க முடியும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முககவசத்தை சரிவர அணிந்து கொள்ள வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story