மயிலாடுதுறையில், அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை


மயிலாடுதுறையில், அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை திறப்பு விழா அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை திறப்பு விழா அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமாமிர்தம் உருவச்சிலை

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல் முன்னோடியுமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் உருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி ரூ.16 லட்சம் செலவில் மயிலாடுதுறை நகர பூங்காவில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலையை திறந்து வைத்தார்.

மாலை அணிவித்து மரியாதை

அப்போது மயிலாடுதுறையில் சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலைக்கு அமைச்சர், மாவட்ட கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story