மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்


மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
x

பங்குனி உத்திரத்தையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

திருநெல்வேலி

பங்குனி உத்திரத்தையொட்டி மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

மேலப்பாளையம் சந்தை

நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடந்து வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படும். அதனை வாங்க ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள்.

இதனால் இங்கு வாரந்தோறும் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடக்கும்.

ஆடுகள் விற்பனை மும்முரம்

இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமானோர் கோவில்களில் ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். தற்போது பங்குனி உத்திரம் நெருங்கி வருவதால், நேற்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

இதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். நேற்று வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அவை தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை நேற்று களைகட்டி காணப்பட்டது.


Next Story