மேலசிந்தலைச்சேரியில் மக்கள் தொடர்பு முகாம்


மேலசிந்தலைச்சேரியில்  மக்கள் தொடர்பு முகாம்
x

உத்தமபாளையம் அருகே மேலசிந்தலைச்சேரியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

தேனி

உத்தமபாளையம் அருகே மேலசிந்தலைச்சேரியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, கணினி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக 5 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்தமபாளையம் தாசில்தார்கள் அர்சுணன், ரத்தினம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story