முள்ளக்காட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு


முள்ளக்காட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

முள்ளக்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துராஜ் (வயது 27). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 4-ந்தேதி மோட்டார் சைக்கிளில் முள்ளக்காட்டில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம். மர்ம நபர் அதை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story