முத்தனூரில், சுகாதார வளாகம் கட்டித்தர வலியுறுத்தல்


முத்தனூரில், சுகாதார வளாகம் கட்டித்தர வலியுறுத்தல்
x

முத்தனூரில், சுகாதார வளாகம் கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெண்களின் நலன் கருதி கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆனதன் காரணமாக மிகவும் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தனர். இதன் காரணமாக சுகாதார வளாகம் முழுவதும் பல்வேறு வகையான செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேலமரங்கள் முளைத்து சுகாதார வளாகத்தை மூடி மறைத்துள்ளது. இந்நிலையில் புதிய சுகாதார வளாகம் கட்டித் தரக்கோரி பலமுறை உள்ளாட்சித் துறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து முத்தனூரில் புதிய சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story