முத்தையாபுரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
முத்தையாபுரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்து போனார்.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது31). இவர் பஞ்சர் கடை நடத்தி வந்தார். கடந்த 23-ந்தேதி இரவு வீட்டின் மாடியில் இவர் தூங்கி கொண்டிருந்தபோது பூனை சத்தம் போட்டு கொண்டிருந்துள்ளது. அந்த பூனையை விரட்டிக்கொண்டு மாடிபடியில் இறங்கியபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story