முத்துகொண்டாபுரம் கிராமத்தில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம்
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த முத்துகொண்டாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் துர்நாற்றத்துடன், அசுத்த நீரில் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகம் போதிய நிதி ஒதுக்கீடு செய்து முத்துகொண்டாபுரம் பெருமாள் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story