நாகர்கோவிலில் 16, 17-ந் தேதிகளில் உணவுத் திருவிழா


நாகர்கோவிலில்  16, 17-ந் தேதிகளில் உணவுத் திருவிழா
x

நாகர்கோவிலில் 16, 17-ந் தேதிகளில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது என கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் 16, 17-ந் தேதிகளில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது என கலெக்டர் அரவிந்த் கூறினார்.

உணவுத் திருவிழா

நாகர்கோவிலில் வருகிற 16, 17-ந் தேதிகளில் உணவு திருவிழா நடக்கிறது. இதையொட்டி துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது:-

குமரி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து வருகிற 16, 17-ந் தேதிகளில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாபெரும் உணவுத் திருவிழாவை நடத்த உள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் புகழ்பெற்ற உணவு பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது.

பட்டிமன்றம்

முதல் நாளான 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு இடையேயான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றின் இறுதி சுற்றும் நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு திருவட்டார் ராமகிருஷ்ணா நேச்சுரோபதி கல்லூரியினரின் யோகா நடனமும் நடைபெற உள்ளது. மாலை 6.30 மணிக்கு சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

கலைநிகழ்ச்சிகள்

17-ந் தேதி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் திருவேணி சங்கமம் முதல் சீ்ரோபாயிண்ட் வரை நடைபயணம் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

ெதாடர்ந்து உணவு திருவிழாவுக்கான விளம்பர பதாகையை கலெக்டர் அரவிந்த் அறிமுகம் செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி குமாரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story