நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
நம்பியூர்
நம்பியூரில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு, சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது, போதுமான பணியாளர்களை தமிழக அரசே நியமனம் செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற ஓட்டுனர், நடத்துனர்களை பணியில் அமர்த்தும் சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story