நம்பியூரில்ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
நம்பியூரில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்
நம்பியூரை அடுத்த கெடாரை பகுதியில் வரப்பாளையம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் ஒரு ஆட்டை வைத்துக்கொண்டு சென்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளை நிறுத்தி அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருப்பூர் மாவட்டம் மங்களம் கணபதிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 23), சேவூர் குரும்பபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் (21) ஆகியோர் என்பதும் இருவரும் சேர்ந்து நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் துண்டுக்காரர் தோட்டத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவருடைய ஆட்டை திருடிக்கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தையும், அஜித்குமாரையும் கைது செய்து ஆட்டை மீட்டனர். மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.