நாசரேத்தில்2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா

நாசரேத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
நாசரேத்:
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 2,000 மரக்கன்றுகள் வழங்கும் திட்ட தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழா தொடக்கமாக பாடகர் குழுவினர் ஆரம்ப பாடல் பாடினர். பேராசிரியர் செல்வராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பர்சார் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். துறைத்தலைவர்கள் கென்னடி, சலோமி, அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்க சமுதாய நல ஒருங்கிணைப்பாளர் எட்வின் சாம்ராஜ் மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன்.சி. லாசரஸ் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். வேதியியல் துறைத்தலைவர் ஜேனட் ஜெயராஜ் நன்றி கூறினார். நாசரேத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராய்ட்சன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் பிரேம் குமார் ராஜசிங் தலைமையில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் சாந்தி சலோமி, சியோன் செல்லா ரூத், பியூலா ஹேமலதா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.






