பரமன்குறிச்சியில்தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி
பரமன்குறிச்சியில் தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
உடன்குடி:
இந்து முன்னணி சார்பில் பரமன்குறிச்சி மாயாண்டி சுவாமி கோவிலில் திடலில் தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் லங்காபதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துலிங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 1,350 தசரா பக்தர்களுக்கு சேலை, இஸ்திரி பெட்டி, அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர். இதில் திரளான தசரா பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story