பொறையாறில், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பொறையாறில், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொறையாறில், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறில் உள்ள தனியார் கல்லூரி நுழைவாயில் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சிரஞ்சீவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள கல்வி உதவி தொகையை உடனே வழங்க வேண்டும்.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் தொகையை ரூ.5,ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில துணை செயலாளர் வீரப்பாண்டியன், மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story