பேரணாம்பட்டு நகராட்சியில்


பேரணாம்பட்டு நகராட்சியில்
x

பேரணாம்பட்டு நகராட்சியில் மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வேலூர் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் தனலட்சுமி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது நகராட்சியை தூய்மைப்படுத்துவது, நகரில் சுற்றித் திரியும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வது, மாடுகளை பிடித்து வேலூரிலுள்ள கோசாலையில் ஒப்படைப்பது, வரி வசூலை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கினார்.

அவரிடம் நகராட்சியில் குப்பை கிடங்கு அமைக்கக் கோரி நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத் ஆகியோர் வலியுறுத்தினர். நகராட்சி ஆணையாளர் வேலவன், நகராட்சி கவுன்சிலர்கள் அப்துல் ஜமீல், அஹம்மத் பாஷா, கோவிந்தராஜ், நகர தி.மு.க. நிர்வாகிகள் அர்ஷத், பீட்டர், சரவணன், லாசர், தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story