பெரியகுளத்தில் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை
பெரியகுளத்தில் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
தேனி
பெரியகுளம் தெற்கு அக்ரகாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், உலக நன்மை வேண்டி 108 மணி நேரம் அகண்ட ஹரே ராம நாமம் கீர்த்தனம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி முதல் நேற்று வரை இந்த பிரார்த்தனை நடைபெற்றது, இதில் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹரே ராம நாம கீர்த்தனம், மதுரகீதம் பஜனை, சுவாமி புறப்பாடு மற்றும் ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடந்தது. ராம நவமி சிறப்பு பூஜை, திருமஞ்சனம், அதைத்தொடர்ந்து பக்தர்கள் எழுதிக் கொடுத்த 35 கோடி ராம நாமத்துடன் ஆஞ்சநேயர் உற்சவ புறப்பாடு நடைபெற்றது. தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story