பெரியகுளத்தில்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
பெரியகுளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
பெரியகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளை தேடி பெரியகுளம் தென்கரை பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றனர். அப்போது தென்கரை பெரிய கண்மாய் கரையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களிடம் எப்படி விசாரிக்கலாம் என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சுந்தரலிங்கம், தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து போலீஸ்காரர்களை தாக்கிய டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 31), பழனிச்சாமி (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story