பொள்ளாச்சியில்தொழிலாளி அடித்துக் கொலை-மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 40). இவர் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முன் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனா.
மேலும் இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குப்புசாமி பகல் நேரங்களில் பழக்கடையில் வேலை பார்த்து வந்ததும், இரவு நேரங்களில் நண்பர்களுடன் மது அருந்துவதும் தெரியவந்தது. எனவே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அவரை யாராவது கல்லால் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் அந்த ஆசாமியை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து இரவில் அவருடன் யார், யார் மது அருந்தினார்கள் என்பது குறித்த விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மார்க்கெட் ரோட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பொள்ளாச்சியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






