புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 470 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்


புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 470 குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்
x

புதுச்சேரி, காரைக்காலில் நேற்று ஒரே நாளில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது.

இதற்காக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் நேற்று மட்டும் 470 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இன்றைய நிலவரப்படி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிகளில் 188 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர தனியார் ஆஸ்பத்திரியில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறுகையில், 'காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்' என்றார்.

1 More update

Next Story