புதுக்கிணற்றில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
புதுக்கிணற்றில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்புவிழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கிணறு கிராமத்தில் சட்டபேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு ஊராட்சித் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, ஒன்றிய ஆணையர் ராணி, தாசில்தார் ரதிகலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டு திறந்து வைத்து பேசினார்.
இதில் வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி சரவணன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிசுரேஷ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், ஊடகப்பிரிவு செயலர் முத்துமணி, வட்டாரத் தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.