புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் ஆலங்கட்டி மழை


புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 16 Jun 2023 3:15 AM IST (Updated: 16 Jun 2023 7:05 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியான எரங்காட்டுபாளையம், வடுகபாளையம், கோட்டபாளையம் உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் அடித்தது. பின்னர் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

5 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. 6 மணி வரை ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதில் சுமார் ½ மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தை நேற்று மழை காரணமாக சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story