புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை


புஞ்சைபுளியம்பட்டி சந்தையில்  ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
x

புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் கால்நடை சந்தை நடைபெற்றது.

இந்த சந்தைக்கு 40 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 150 நாட்டு மாடுகள், 80 சிந்து மாடுகள், 200 ஜெர்சி இன மாடுகள், 110 கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதேபோல் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

ரூ.1 கோடி

இதில் எருமை மாடு ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், ஜெர்சி இன மாடு ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரையும், கலப்பின மாடு ஒன்று ரூ.23 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையும், சிந்து மாடு ஒன்று ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கால்நடைகளின் தீவன பிரச்சினை தீர்ந்துவிட்டது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டு மாடுகளை வாங்கினர். இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் மாடு ஒன்று ரூ.4 ஆயிரம் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் வெள்ளாடு ஒன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், செம்மறி ஆடு ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து கால்நடைகளை வாங்கி சென்றனர்.


Related Tags :
Next Story