ராமநாதபுரத்தில், காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது.
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது.
தகுதி நீக்கம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து உடனடியாக அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவதூறு வழக்கிற்காக அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் எம்.பி. பதவி பறிப்பு என்பது எதிர்கட்சிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களின் குரல்வளையை ஒடுக்க மத்திய அரசு ஜனநாயக விரோதமாக செயல்படுகிறது என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தபடி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரண்மனை முன்பாக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமையில் சத்தியாகிரக அறவழிபோராட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், ராஜாராம்பாண்டியன் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அறவழி போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு இப்ராகீம், மகிளா காங்கிரஸ் பெமிலா விஜயகுமார், மனித உரிமைத்துறை செய்யது அப்தாகீர், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், கோவிந்தன், அன்வர் அலி, மாவட்ட துணை தலைவர் மேகநாதன், சேவாதளம் அப்துல் அஜீஸ், வக்கீல் பிரிவு அன்புச்செழியன் உள்பட மாநில, மாவட்ட, வட்டார, நகர. பேரூர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், சார்பு அணி தலைவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.