ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இபுராகிம் ஷாகீது பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா 24-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் 24-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜூலை 2-ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளின்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story