ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை


ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டு வருகின்றது. விளைச்சல் பாதிப்பு காரணமாக இந்த விலை இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் அரண்மனை மார்க்கெட், சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தக்காளியின் விலை ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக தற்போது தக்காளியின் விலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதால் தள்ளுவண்டி, மார்க்கெட், காய்கறி கடை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தக்காளியின் விலையை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக அதன் விலை விவரத்தையும் எழுதப்பட்ட சிலேடு ஒன்றையும் வியாபாரிகள் தொங்கவிட்டுள்ளனர்.

வியாபாரம் பாதிப்பு

இதுகுறித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறும்போது:- கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வியாபாரத்திற்காக அனுப்பப்படுகின்றன. தற்போது தக்காளியின் விளைச்சல் அதிகமாக பாதித்துள்ளதால் வரத்து குறைந்துவிட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.40-ல் இருந்து ரூ.50 வரை தான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தக்காளி விலை உயர்வு காரணமாக அதன் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. சாதாரணமாக காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரை தக்காளி வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது அரை கிலோ மட்டுமே தான் தக்காளி வாங்கி செல்கின்றனர். தக்காளியின் விலை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story