சாயர்புரத்தில் கிறிஸ்மஸ் கீதஆராதனை


சாயர்புரத்தில்  கிறிஸ்மஸ் கீதஆராதனை
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

சாயர்புரத்தில் கிறிஸ்மஸ் கீதஆராதனை நடந்தது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரத்தில் ஜி.யு. போப் சபை மன்றத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா போட்டிகள் சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது. இதில் சாயர்புரம் ஜி.யு.போப் சபை மன்றத்திற்கு உட்பட்ட கல்லூரிகள், ஆலய குழுக்கள் கலந்து கொண்டன. போட்டிகளை சாயர்புரம் சேகரகுரு இஸ்ரேல் ராஜா துரைசிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். குடில் போட்டியில் முதலிடம் பிடித்த இடையர்காடு குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் நர்சரி பள்ளிக்கு ரூ.7,500 பரிசும், 3-ம் இடம் பிடித்த சாயர்புரம் ஜி.யு போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.5 ஆயிரம் பரிசும் மற்றும் 3 அணிகளுக்கும் பரிசு கோப்பைகளும் வழங்கபட்டது. அதேபோல் கிறிஸ்தவ பாடல் போட்டியில் முதலிடம் பிடித்த ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் சபை பாடல் குழுவினர் அணிக்கு ரூ.7,500 பரிசும், 3-வது இடம் பிடித்த சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் பரிசும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு லே செயலர் நீகர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன் ராஜ் அருமை நாயகம், போப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பிரேம் குமார் ராஜா சிங், போப் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில் ராஜ், ரட்சன்யபுரம் சேகர தலைவர் பாக்கியராஜ், சாயர்புரம் சபை ஊழியர் சாமுவேல் பொன்சிங், விழா குழு உறுப்பினர்கள் ராஜேஷ் ரவி சந்தர், அலெக்சாண்டர், அபிஷேகம், ராஜதுரை ஏசுவடியான், ஆன்ட்ரு அதிசயராஜ், ஜான்சன் பொன்சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவி கள், சபை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story