சாயர்புரத்தில்ஜி.யூ.போப் நினைவு தினம்


சாயர்புரத்தில்ஜி.யூ.போப் நினைவு தினம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் ஜி.யூ.போப் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அளவிலான மிஷினரிகள் சார்பில் ஜி.யூ.போப் நினைவு தின நிகழ்ச்சி பரிசுத்த திருத்துவ ஆலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேகர குரு மனோகர் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் திமோத்தேயூ ரவீந்தர் தலைமை தாங்கி, டாக்டர் ஜி.யு.போப் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் நிகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல உயர்கல்விமேலாளர் பிரேம் குமார் மற்றும் திருமண்டல அளவிலான குருவானவர்கள், சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story