சங்கரன்குடியிருப்பில் காங்கிரஸ் கொடியேற்று விழா
சங்கரன்குடியிருப்பில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் சார்பில் சங்கரன்குடியிருப்பில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டாரத் தலைவர் சக்திவேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிசுரேஷ், வடக்கு வட்டார தலைவர் பார்த்சாரதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பாலா வரவேற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியேற்றி வைத்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story