சாத்தான்குளத்தில்இளைஞர்களுக்கு நல்வழிகாட்ட'பாய்ஸ் கிளப்' தொடங்கப்படுகிறது


சாத்தான்குளத்தில்இளைஞர்களுக்கு நல்வழிகாட்டபாய்ஸ் கிளப் தொடங்கப்படுகிறது
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 10:51 AM GMT)

சாத்தான்குளத்தில் இளைஞர்களுக்கு நல்வழிகாட்ட 'பாய்ஸ் கிளப்' தொடங்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் இளைஞர்களுக்கு நல்வழிகாட்ட விரைவில் 'பாய்ஸ் கிளப்' தொடங்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்

சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பழைய தாலுகா அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள கூட்ட அரங்கம் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரடியாக ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், சாத்தான்குளம் பகுதியில் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்கவும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டவும் போலீஸ்துறையினர் 'பாய்ஸ் கிளப்' தொடங்கி, அதன் மூலம் அவர்களுக்கு திறம்பட செயலை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சாத்தான்குளத்தில் பாய்ஸ் கிளப் மீண்டும் தொடங்கப்படும். இதில் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருப்பதற்காக போலீஸ் துறை ஒத்துழைப்பு கொடுக்கும்.

போதை பழக்கம்

இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களில் சிக்கிவிடக்கூடாது. அதில் சிக்கியவர்கள் நல்வழிக்கு திரும்ப வேண்டும். தவறான பாதைக்குச் செல்லக்கூடாது. அவருக்காக அவருடைய திறன்களை வெளியே கொண்டு வந்ததற்காக இந்த தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க பழைய தாலுகா அலுவலகத்தில் உள்ள கட்டிடத்தை தேர்வு செய்துள்ளோம். இங்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி, விரைவில் முடிக்கப்படும், என்றார்.

இந்த ஆய்வின் போது சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story