சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 5½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,000-க்கும், முல்லை பூ ரூ.360-க்கும், காக்கடா ரூ.375-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், பட்டுப்பூ ரூ.36-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், அரளி ரூ.60-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story