சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,010-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.1,010-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,010-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,010-க்கும், முல்லை ரூ.340-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.36-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், அரளி ரூ.70-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story