செய்துங்கநல்லூர் பகுதியில்கஞ்சா விற்ற 2 பேர் கைது


செய்துங்கநல்லூர் பகுதியில்கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தனிப்படை ரோந்து

செய்துங்கநல்லூர் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் செய்துங்கநல்லூர் வள்ளுவர் காலனி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் சிக்கினர்

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் மேல புத்தனேரி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகாராஜன் (வயது 24), முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் ராஜா (22) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

கைது-கஞ்சா பறிமுதல்

தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அந்த போலீசார் வழக்குப்பதிரு செய்து மகாராஜன், ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 125 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் கஞ்சா விற்று வைத்திருந்த ரூ.52 ஆயிரத்து

400-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜா மீது ஏற்கனவே முறப்பநாடு போலீஸ் கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.


Next Story