சிவகங்கையில், காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில், காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
x

சிவகங்கையில், காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை


காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவி ஸ்ரீவித்யா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இமயமடோனா, நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், மகேஷ் குமார், வட்டார தலைவர்கள் மதி, சோனைமுத்து, வேலாயுதம், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story