தெற்குமயிலோடையில்விஜயலட்சுமி கோவில் கொடை விழா
தெற்குமயிலோடையில் விஜயலட்சுமி கோவில் கொடை விழா நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் விஜயலட்சுமி, கசமாடசாமி, வைரவன், கருப்பசாமி, கழுமூர்த்தி ஆகிய தெய்வங்களுக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு கொடிஏற்றத்துடன் கொடை விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த திங்கள் கிழமை அன்று குடியழைப்பு, வடக்கத்தியம்மன் சூரையை தொடர்ந்து, கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதில் பால்குடம் ஊர்வலம், அக்னிசட்டி ஊர்வலம், மாவிளக்கு ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். விழாவில் ஆடல், பாடல், வில்லிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story