ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில், ராஜவர்மன் ஆஜர்


ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில், ராஜவர்மன் ஆஜர்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆஜர் ஆனார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், கடந்த2018-ம் ஆண்டு தொழில் அதிபர் ரவிச்சந்திரன் என்பவரை கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததுடன், மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த புகார் தொடர்பாக ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றதை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் ஆஜர் ஆனார். மறுஉத்தரவு வரும் வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Related Tags :
Next Story